கூட்டுறவு சங்கத்தில் ஆவின் பாலகம்

கூட்டுறவு சங்கத்தில் ஆவின் பாலகத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Update: 2023-08-06 18:45 GMT

சிவகங்கை

பாகனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ் ஏற்பாட்டில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் பாகனேரியில் ஆவின் பாலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ் வரவேற்று பேசினார். செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆவின் பாலகத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, பாகனேரி புவனேந்திரன், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்