கோவில்பட்டி நகராட்சி பூங்காவில்ரூ.2 கோடியில் அறிவுசார் மைய கட்டுமானம்
கோவில்பட்டி நகராட்சி பூங்காவில் ரூ.2 கோடியில் அறிவுசார் மைய கட்டுமானத்தை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார்.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகராட்சி ராமசாமி தாஸ் பூங்காவில் மூலதன மானியத் திட்டத்தில் ரூ.2 கோடி செலவில் அறிவு சார் மைய கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இதே போல புதுக் கிராமத்தில் ரூ 1.48 கோடி செலவில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியும், ரூ 30 லட்சம் செலவில் நகராட்சி பூங்கா அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா நேற்று மாலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போத பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அவருடன் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கா. கருணாநிதி, ஆணையாளர் ராஜாராம், நகராட்சி செயற் பொறியாளர் இளங்கோ, பொறியாளர் ரமேஷ், சுகாதார அதிகாரி நாராயணன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.