கம்பம் உழவர் சந்தையில் டிஜிட்டல் பலகையில் காய்கறி விலைப்பட்டியல் : பொதுமக்கள் வரவேற்பு

கம்பம் உழவர் சந்்தையில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பலகை காய்கறி விலைப்பட்டியல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.;

Update:2022-12-12 00:15 IST

கம்பத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கேரளாவை சேர்ந்த மக்கள் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இதனால் சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்தது. அதே சமயம் கடந்த 10 ஆண்டுகளாக உழவர் சந்தையில் எந்தவொரு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சந்தையில் டிஜிட்டல் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பலகையில் காய்கறிகளின் விலை விவரம் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த டிஜிட்டல் பலகை மூலம் தினந்தோறும் காய்கறி விலையை நிர்ணயிப்பது அதிகாரிகளுக்கு சுலபமாக உள்ளது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்