நிலத்தை அபகரிக்க முயற்சி; 2 பேர் மீது வழக்கு

கடையம் அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றதாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update:2023-09-09 00:15 IST

கடையம்:

அம்பை அருகே இடைகால் பகுதியில் மணியன் மகன் ராஜா அருணாசலம் என்பவருக்கு சொந்தமாக 155 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனது தந்தை மணியம் போன்று போலி கையெழுத்திட்டு அபகரிக்க முயன்றதாக தென்காசி தாலுகா குலசேகரப்பட்டியை சேர்ந்த தேவகுமாரன் மற்றும் செட்டியூரை சேர்ந்த முருகேசன் ஆகியோர் மீது ஆழ்வார்குறிச்சி போலீசில் ராஜா அருணாசலம் புகார் செய்தார்.

தடய அறிவியல் சோதனையில் ஆவணமும், மணியம் கையெழுத்தும் போலியானது என தெரிய வந்தது. தொடர்ந்து அம்பை கோர்ட்டில் ராஜா அருணாசலம் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி தேவகுமாரன், முருகேசன் ஆகிய 2 பேர் மீது ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்