பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கொள்ளை முயற்சி
ஆலங்குளம் அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கொள்ளை முயற்சி நடந்தது.;
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே மாறாந்தையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவில் மேற்கூரை உடைக்கும் சத்தம் வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், மாறாந்தை புறக்காவல் நிலையத்தில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு வருவதற்குள், கொள்ளையர்கள் 5-க்கும் மேற்பட்டோர் சுவர் ஏறி குதித்து தப்பி சென்று விட்டனர். பின்னர் போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, மேற்கூரை, கதவு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.