இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 23-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
பாஜக மையக்குழு கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கிறார் பியூஷ் கோயல். அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க ஆயத்தம் என கூறப்படுகிறது.
செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 6ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிக சரக்குப் பெட்டகங்களை சுமக்கும் திறனுடைய மிக நீளமான சரக்குப் பெட்டக கப்பலை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
சண்டிகாரில் CH01-DC-0001 என்கிற பேன்ஸி நம்பர் ரூ.31 லட்சத்திற்கு விற்பனையாகியிருக்கிறது. 0009 நம்பர் ரூ.21 லட்சத்துக்கும், 0007 நம்பர்ரூ.16 லட்சத்துக்கும், 9999 நம்பர் ரூ.14 லட்சத்துக்கும் ஏலத்தில் விற்பனையாகியிருக்கிறது.