சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update:2025-12-23 09:08 IST

சென்னை,

திமுக அரசு அளித்த வாக்​குறு​திப்​படி, பணி நிரந்​தரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஐகோர்ட்டு உத்​தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு செய்த மேல்​முறையீட்டை கைவிட வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தொகுப்​பூ​திய செவிலியர்​கள் நேற்று சென்னையில் உண்ணாவிரத போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தமிழ்​நாடு செவிலியர்​கள் மேம்​பாட்டு கழகம் சார்​பில் நடந்த இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 750-க்​கும் மேற்​பட்ட செவிலியர்​களை கைது செய்த போலீசார் வாக​னத்​தில் ஏற்றி கிளாம்பாக்கத்தில் இறக்கி விட்​டனர். இதையடுத்​து, கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யத்​தில் செவிலியர்​கள்போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதைத்​தொடர்ந்து அவர்களைக் கைது செய்​து, ஊரப்​பாக்​கத்​தில் உள்ள திருமண மண்​டபத்தில் போலீ​ஸார் அடைத்தனர். அங்​கும் செவிலியர்​கள் போராட்​டத்​தைத் தொடர்ந்​தனர். செவிலியர்​கள் கைது செய்​யப்​பட்​டதை கண்​டித்​து, தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைகள், மாவட்ட தலைமை மருத்​து​வ​மனை​களில் நேற்று செவிலியர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொங்கல் பண்டிகைக்கு முன்பாக 723 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இருப்பினும் அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை போலீசார் வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்