மறைமலைநகரில் பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி
மறைமலைநகரில் பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.;
பஸ்-ஆட்டோ மோதல்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சதாசிவம் சாலை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). ஆட்டோ டிரைவர்.
இவர் நேற்று அதிகாலை மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள சாலையில் ஆட்டோவை ஓட்டி செல்லும் போது அந்த வழியாக வந்த தனியார் நிறுவன பஸ்சும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
சாவு
இதில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. ஆட்டோ டிரைவர் முருகன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் ஆட்டோ டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.