வேளாண் சந்தை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

வேளாண் சந்தை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;

Update:2023-10-11 00:58 IST

திமிரி

வேளாண் சந்தை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் பல்வேறு கிராமங்களில் வேளாண் சந்தை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.

அதன்படி, திமிரியை அடுத்த பெருமாந்தாங்கல் கிராமத்தில் கலவை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் சார்பில் தேசிய வேளாண் சந்தை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மதன் பாண்டியன், கலந்து கொண்டு வேளாண் சந்தை குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்