முன்மாதிரி ஊராட்சியாக உருவாக்க விழிப்புணர்வு நடைபயணம்

ஏலகிரி மலை ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக உருவாக்க விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.;

Update:2022-08-18 23:40 IST

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை ஊராட்சி 14 கிராமங்களை கொண்டுள்ளது. ஏலகிரி மலை சுற்றுலா தலமாக உள்ளதால், சுற்றுச்சூழலை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள ஊராட்சி மன்றம் சார்பில் பல்வேறு பணிகள் செய்து வருகின்றனர். இந்தநிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஏலகிரி மலை ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக உருவாக்க முழு சுகாதார திட்ட நடைபயணம் நடைபெற்றது. ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் தலைமை தாங்கினார். .

ஏலகிரி மலை அருகே உள்ள மங்கலம் கூட்ரோடு பகுதியில் தொடங்கி, ஏலகிரி மலையில் உள்ள 14 கிராமத்திற்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருமால், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஏலகிரி மலை பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்