அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

கார்த்திகை மாதம் பிறந்ததையடுத்து கிருஷ்ணகிரியில் அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து நேற்று முதல் விரதம் தொடங்கினர்.

Update: 2022-11-17 19:30 GMT

கார்த்திகை மாதம் பிறந்ததையடுத்து கிருஷ்ணகிரியில் அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து நேற்று முதல் விரதம் தொடங்கினர்.

கார்த்திகை மாதம் பிறப்பு

ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு அய்யப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை 5 மணிக்கு கிருஷ்ணகிரியில் சேலம் சாலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

கோவில் குருசாமி சிவதாஸ், பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்தார். முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தன.

விரதத்தை தொடங்கினர்

கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய 2 ஆண்டுகளும் கொரோனா தொற்று காரணமாக அய்யப்பன் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

அப்போது 100 முதல் 150 பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் குறைந்ததின் காரணமாக 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்