பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்;

Update:2023-08-03 00:15 IST

திருக்கடையூர்:

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் இனக் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து, திருக்கடையூர் கடை வீதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை தொகுதி மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மண்டல பொறுப்பாளர் நீலமேகம் கண்டன உரையாற்றினார். இதில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்