கண்மாயில் பெண் பிணம்

கண்மாயில் பெண் பிணம் மிதந்தது.;

Update:2023-03-04 00:52 IST

சிவகாசி, 

திருத்தங்கல் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள உறிஞ்சிகுளம் கண்மாயில் 42 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் நேற்று காலை மிதந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருத்தங்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் மீட்பு வாகனத்தில் வந்து உறிஞ்சிகுளம் கண்மாயில் இறங்கி பெண் பிணத்தை மீட்டனர். அழுகிய நிலையில் இருந்ததால் இறந்து கிடந்தது யார் என்று அடையாளம் காண முடியவில்லை. இதுகுறித்து திருத்தங்கல் கிராம நிர்வாக அலுவலர் பாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உறிஞ்சிகுளம் கண்மாயில் பிணமாக கிடந்தது யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்