பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
நாங்குநேரி அருகே, நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது சம்பந்தமாக தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
இட்டமொழி:
தி.மு.க. நாங்குநேரி மேற்கு ஒன்றியம் தளபதிசமுத்திரம் ஊராட்சியில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கி ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில் நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை, யூனியன் துணைத்தலைவர் இசக்கிப்பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்டச்செயலாளர் இரா.ஆவுடையப்பன் தளபதிசமுத்திரம் நான்கு வழிச்சாலை பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவச்சிலை அமைப்பதற்கான இடத்தையும் பார்வையிட்டார்.