மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானான்.;

Update:2023-03-22 00:01 IST

ஜோலார்பேட்டை

மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானான்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பால்நாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோபால் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 17). இவர் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சுரேஷ் நேற்று மதியம் வீட்டில் குளித்துவிட்டு மின்விசிறிக்கான சுவிட்ச் போட்டார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக சிறுவனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்