காலை உணவு வழங்கும் திட்டம்

மன்னம்பந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை ராஜகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;

Update:2023-08-26 00:15 IST

தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் நேற்று தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவி பிரியா பெரியசாமி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ராஜகுமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) பன்னீர்செல்வம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகமணி, இளையபெருமாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குமாரசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ரஜினி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்