பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு

இலுப்பூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2023-08-19 00:36 IST

இலுப்பூர் அருகே உள்ள கோவிந்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சங்கர். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 42). இவர் வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சரஸ்வதி நேற்று முன்தினம் காலை அப்பகுதியில் 100 நாள் வேலைக்கு வீட்டின் கதவை பூட்டாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் சங்கிலி மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடிவிட்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்