கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு

வந்தவாசி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2023-10-13 22:22 IST

வந்தவாசி

வந்தவாசி அருகே வழூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த கணபதி என்பவர் பூசாரியாக உள்ளார்.

இவர் நேற்று இரவு பூஜையை முடித்துவிட்டு வழக்கம்போல் கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

இன்று காலை கோவிலுக்கு வந்தபோது, கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து பொதுமக்களிடம் தெரிவித்தார். அவர்கள் கீழ்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் இரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அம்மன் கழுத்தில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தாலி, பெட்டகத்தில் இருந்த 2 பித்தளை குத்துவிளக்குகள் ஆகியவை திருடி சென்றது தெரியவந்தது.

மேலும் உண்டியலின் பூட்டை உடைக்க முடியாததால் சுமார் ரூ.25 ஆயிரம் தப்பியது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்