ஆடிப்பெருக்கு விழா
திசையன்விளை அருகே பிறவி பெருமாள் ஐயன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா;
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள முதுமொத்தன்மொழி, ஆனைகுடி நாடார்கள், ஆனை பேரன் நாடார் மற்றும் கோனார் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட பூரண கலா சமேத பிறவி பெருமாள் ஐயன் கோவிலில் நேற்று ஆடிப்பெருக்கு விழா நடந்தது.
முன்னதாக கணபதி ஹோமம், அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, ஊஞ்சல் உற்சவம், சுமங்கலி பூஜை ஆகியவை நடந்தது. திருக்கல்யாண விழாவில் கலந்து கொண்ட சுமங்கலிகளுக்கு தாம்பூல தட்டில் மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல், வெற்றிலை, பாக்கு, விபூதி உள்ளிட்ட மங்கலபொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.