கல்குவாரி கருத்து கேட்பு கூட்டம்
கல்குவாரி அமைப்பதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.;
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே கச்சை கட்டியில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு மக்கள் கருத்து கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடந்தது. மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி தலைமை தாங்கினார். மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் குவாரி உரிமையாளர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் குவாரி அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பும் அமைக்க கூடாது என்று மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்தனர். முடிவில் அனைவரின் கருத்துக்களும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் ஷாலினி தெரிவித்தார். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன் என்று கூறினார்.