கார்மோதி நாடக கலைஞர் காயம்

கலவை அருகே கார்மோதி நாடக கலைஞர் காயம் அடைந்தார்.;

Update:2023-07-09 23:10 IST

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மேல்நேத்தபாக்கம் கிராமத்தில் வசிப்பவர் ராமமூர்த்தி. தெருக்கூத்து நாடக கலைஞர். நேற்று காலையில் நாடகத்தில் நடித்துவிட்டு, மொபட்டில் கலவையிலிருந்து, மேல்நேத்தபாக்கம் சென்று கொண்டிருந்தார். டாஸ்மாக் கடை அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார் ராமமூர்த்தி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவர்கள், அவரை கலவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கலவை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சூர்யா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்