தச்சுத் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தச்சுத் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-03-02 00:14 IST

விராலிமலை ஒன்றியம், செவந்தியாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகன் நாகராஜன் (வயது 40). தச்சுதொழிலாளி. நாகராஜன் தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவியிடம் இருந்து பிரிந்து மாத்தூர் அண்ணாமலை நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக தங்கி கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக மன வேதனையில் இருந்து வந்த நாகராஜன் நேற்று முன்தினம் இரவு செவந்தியாணிபட்டியில் உள்ள அவரது சகோதரருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இதனால் பதறிப்போன அவர் உடனே தனது நண்பரின் உதவியுடன் மாத்தூருக்கு சென்று பார்த்தபோது அங்கு வீட்டின் கதவு உள்புறமாக பூட்டி இருந்துள்ளது. கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது நாகராஜன் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் நாகராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்