கார், மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசம்

ராதாபுரம் அருகே கார், மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது.;

Update:2023-03-08 01:05 IST

ராதாபுரம்:

ராதாபுரம் அருகே கார், மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது.

ஆம்புலன்ஸ் டிரைவர்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள காரியாகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் சென்னையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று அதிகாலையில் இவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார், மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதேபோல் அருகில் உள்ள விவசாயி அருண்குமார் வீட்டு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிந்தது. அதையும் அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். எனினும் 2 மோட்டார் சைக்கிள்கள் முழுவதுமாகவும், கார் பாதியளவும் எரிந்து நாசமானது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து அருண்குமார் ராதாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் முன்விரோதம் காரணமாக யாரேனும் தீவைத்தனரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்