கிரானைட் கற்கள் கடத்திய 2 பேர் மீது வழக்கு
கிரானைட் கற்கள் கடத்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
பர்கூர்:
ஆந்திர மாநிலம் குப்பம் மற்றும் சித்தூர் பகுதிகளில் இருந்து கந்திகுப்பம் அருகே அச்சமங்கலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கிரானைட் கற்கள் கடத்தி வரப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் சின்னமட்டாரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் தனகோட்டி, பசவன்ன கோவில் அருகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணமின்றி கிரானைட் கற்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தனகோட்டி அளித்த புகாரின்பேரில் கந்திகுப்பம் போலீசார் கிரானைட் கற்கள் கடத்தியதாக ஆந்திர மாநிலம் குப்பம் கொத்தபேட்டையை சேர்ந்த ராஜசேகர் (வயது 43) மற்றும் ஒசநாட்டை சேர்ந்த சிவசங்கர் (45) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்தனர்.