எருமப்பட்டியில் இருதரப்பினர் தகராறில் 6 பேர் மீது வழக்குப்பதிவு

எருமப்பட்டியில் இருதரப்பினர் தகராறில் 6 பேர் மீது வழக்குப்பதிவு;

Update:2022-09-17 00:22 IST

எருமப்பட்டி:

எருமப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கந்தசாமி மகன் ராகுலன் (வயது 37). இவருடைய மனைவி பிரியங்கா (27). இந்த நிலையில் ராகுலன் இரவு வீட்டிற்கு வந்தபோது பக்கத்து வீட்டுக்காரர் சரவணன் என்பவர் பேரல் ஒன்றை நடுரோட்டில் வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது ராகுலனுக்கும், சரவணன், அரவிந்தன், நவீன், விஷ்ணு ஆகிய 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 4 பேரும் சேர்ந்து ராகுலனை தாக்கியதாகவும், தடுக்க வந்த மனைவி பிரியங்காவை பைப்பால் தாக்கினார்களாம். இதையடுத்து கணவன், மனைவி 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மேலும் இவர்கள் கொடுத்த புகாரின்பேரில் எருமப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பூபதி வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சரவணன், அரவிந்த், நவீன், விஷ்ணு ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

இதேபோல் சரவணன் மனைவி ரேகா (32) கொடுத்த புகாரின்பேரில் ராகுலன், பிரியங்கா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்