பெண்களை தாக்கி கொலை மிரட்டல்; 2 வாலிபர் மீது வழக்கு

தர்மபுரி அருகே ஆபாச குறுந்தகவல் அனுப்பியதை தட்டி கேட்டதால் பெண்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update:2022-09-20 00:15 IST

அரூர்:

அரூர் அருகே உள்ள நாச்சனம்பட்டியை சேர்ந்தவர் பசுபதி (வயது 22). தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சதீஷ்குமார் என்பவரின் செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை சதீஷ்குமாரின் மனைவி மற்றும் உறவினர் மகள் ஆகியோர் தட்டி கேட்டு உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பசுபதி உறவினர் சரத்குமார் (26) ஆகிய 2 பேர் சதீஷ்குமாரின் மனைவி மற்றும் உறவினர் மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இதுதொடர்பான புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்