சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

அயோத்தியாப்பட்டணம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

Update: 2023-03-07 22:05 GMT

அயோத்தியாப்பட்டணம்

அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள வெள்ளியம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் (வயது 22). இவர் 15 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். சிறுமி கர்ப்பமான நிலையில் பிரசவத்திற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியிடம் விசாரணை நடத்திய டாக்டர்கள், இதுகுறித்து சேலம் குழந்தை திருமண தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் காரிப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சிறுமியை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய வாலிபர் பிரகாஷ்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்