'ஆட்சியில் பங்கு’: அமைச்சர் ஐ.பெரியசாமியின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை பதிலடி

ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.;

Update:2026-01-12 12:25 IST

சென்னை,

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆட்சியில் பங்கு என்ற தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஆனால் கூட்டணி ஆட்சி கிடையாது என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக திமுகவின் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி ஆட்சி குறித்து ஐ.பெரியசாமி பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து செல்வப்பெருந்தகை பேசியதாவது;

”எல்லோருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. நாங்கள் எங்களது கருத்தை சொல்லி இருக்கிறோம். ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து. ஆட்சியில் பங்கு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே,  ராகுல்காந்தி சேர்ந்து முடிவு எடுப்பார்கள்.” என்றார்.

அப்போது ‘தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி எப்போது?’ என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர் இதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, ‘தமிழகத்தில் இப்போது நடப்பதும் காங்கிரஸ் ஆட்சிதான்’ என்று கூறியுள்ளார். செல்வப்பெருந்தகையின் இன்றைய பேட்டி, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்