மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

களக்காடு அருகே மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update:2023-06-04 00:25 IST

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டி காலனி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி செல்வமாலா (25). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதற்கிடையே மணிகண்டனின் சகோதரியான பத்தமடையை சேர்ந்த கணேசன் மனைவி பாப்பா (37) காடுவெட்டியில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு வந்துள்ளார். அப்போது அவர் செல்வமாலாவை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் மணிகண்டனும், பாப்பாவும் சேர்ந்து, செல்வமாலாவை தாக்கினர்.

இதில் காயமடைந்த அவர் சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக மணிகண்டன், அவரது சகோதரி பாப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்