அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நெல்லையில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.;

Update:2023-08-26 01:42 IST

சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், கடந்த ஆண்டு நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக்கோரி மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். அதன் மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையொட்டி நெல்லை வண்ணார்பேட்டை பாலத்தின் கீழ் அ.தி.மு.க. நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் வண்ணார்பேட்டை புறவழிச்சாலையில் அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்