உலக புத்தக தின விழா

சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.;

Update:2023-04-28 00:15 IST


சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது. மாவட்ட மைய நூலக அலுவலர் சாண் சாமுவேல் தலைமை தாங்கினார். நூலகர் தவமணி வரவேற்றார். ஓய்வு பெற்ற வானொலி நிலைய அதிகாரி ஞானசம்பந்தன், மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராசன், தமிழ் சங்கத்தலைவர் கண்ணப்பன், செயலாளர் ராமச்சந்திரன், வாசகர் வட்டத்தலைவர் அன்புத்துரை, நூலக ஆய்வாளர் சண்முக சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் நாகராசன் எழுத்தாளர் அ.ஈஸ்வரனுக்கு நூலகத்தின் சார்பாக நினைவு பரிசு வழங்கினார். எழுத்தாளர் அ.ஈஸ்வரன் ஏற்புரை வழங்கினார். முடிவில். நூலகர் சாந்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்