அகோர வீரபத்திரர், ரணவீரபத்திரர் சுவாமிகளுக்கு சந்தனகாப்பு அலங்காரம்

அகோர வீரபத்திரர், ரணவீரபத்திரர் சுவாமிகளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.;

Update:2022-12-06 00:08 IST

ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலில் கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சோம வார விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாத 3-வது சோமவார விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஆத்மநாத சுவாமி, மாணிக்கவாசகருக்கு உபதேசித்து அருளிய குருந்த மரநிழலின் முன்பு 108 சங்குகளில் நீர் நிரப்பி வைத்து பூஜை நடைபெற்றது. பின்னர் குருந்த மூலத்தில் சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, 108 சங்குகளில் உள்ள புனித நீரை ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கோவில் முன்மண்டபத்தில் உள்ள அகோர வீரபத்திரர், ரணவீரபத்திரர் சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்