சந்தனமாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சந்தனமாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;

Update:2023-05-26 01:56 IST

நெல்லை தச்சநல்லூர் பிராயன்குளம் கிராமத்தில் உள்ள சந்தனமாரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 18-ந் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையுடன், கும்ப பூஜை, பிம்பசுத்தி, வேதிகை பூஜை, பூர்ணாகுதி யாகசாலை நிறை தீபாராதனை நடைபெற்றது. 10.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கும்பம் எழுந்தருளி விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து விநாயகர், மூலஸ்தான மூர்த்திகள், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்