கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலை

கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

Update: 2022-06-27 15:27 GMT

திருவாரூரில் கொரோனாவால் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 195 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ரூ.25 லட்சம் காசோலை

அதனை தொடர்ந்து கூத்தாநல்லூர் வட்டம் புள்ளமங்கலத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த ராஜ்சுந்தர் கொரோனா நோய் தொற்றால் இறந்தார். இவருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வந்த ரூ.25 லட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் கலெக்டர் வழங்கினார். மேலும் கச்சனம் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் 2 மணி நேரம் இடைவெளியின்றி இரு கரங்களாலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை புரிந்துள்ளனர். அந்த மாணவர்களை கலெக்டர் வாழ்த்தினார்.

இதில் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்மணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்