பெண்களுக்கான செஸ் போட்டி

தர்மபுரியில் பெண்களுக்கான செஸ் போட்டியை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.;

Update:2022-07-17 21:58 IST

தர்மபுரியில் பெண்களுக்கான செஸ் போட்டியை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி

சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட்2022 போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் குறித்து தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட விளையாட்டு பிரிவு மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதேபோன்று இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், சிறு வணிகம் செய்யும் மகளிர் உள்ளிட்ட ஏராளமான பெணகள் பங்கேற்ற "நம்ம செஸ் நம்ம பெருமை" என்ற பெண்களுக்கான செஸ் போட்டி தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த செஸ் போட்டியை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து விளையாடினார். இந்த போட்டியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர்.

மன அழுத்தம்

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சாந்தி பேசுகையில், அறிவு சார்ந்த செஸ் போட்டிகளில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மன அழுத்தத்தை குறைக்கும் இது போன்ற விளையாட்டுகளில் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள வேண்டும். இந்த விளையாட்டை முறையாக கற்றுக்கொடுக்க மாவட்ட விளையாட்டு அரங்கில் போதுமான பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து செஸ் போட்டி எவ்வாறு விளையாட வேண்டும். இதற்கான விதிமுறைகள் என்ன போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், மாது உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்