தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ம் தேதி ஆலோசனை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ம் தேதி தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.;
சென்னை,
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ம் தேதி தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில கல்விக் கொள்கை, உயர்கல்வி மேம்பாடு, தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.