குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

எட்டயபுரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.;

Update:2022-06-22 18:28 IST

எட்டயபுரம்:

எட்டயபுரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா, சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சுபாஷினி குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான அரசின் நலத்திட்டங்கள், குழந்தை திருமணம், போக்சோ சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து பேசினர். எட்டயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துவிஜயன், பேரூராட்சி அலுவலர் ஜோதி, செங்குந்தர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்து மாரியப்பன், கிராம சுகாதார செவிலியர், பள்ளி குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்