குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

உடன்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.;

Update:2023-07-01 00:15 IST

உடன்குடி:

உடன்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பஞ்சாயத்து அளவிலான குழந்தைகள் நல பாதுகாப்பு குழு கூட்டம் தலைவர் ஹூனமரா அஸ்ஸாப் கல்லாசி தலைமையில் நடந்தது. பஞ்சாயத்து உறுப்பினர்கள் பேருராட்சி. ஊழியர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்தனர். குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் பாதிப்பு, குழந்தைகளுக்கு ஏற்படும் தொல்லைகள், இரண்டு வயது குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்தல், மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள், பள்ளிகளுக்கு அருகே போதை பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வதை தவிர்ப்பது, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சம்பந்தமாக தெரிவிக்க வேண்டிய போன் நம்பர்கள,் பெற்றோரை இழந்தவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்று திறனாளிகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்