சின்னசேலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

சின்னசேலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-19 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். துணை தலைவர் அன்புமணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது, தேவையான உதவிகளை செய்வது, குழந்தைகளின் ஆரோக்கிய நலன் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிவேல், வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நிரஞ்சனா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம், மகளிர் திட்ட வட்டார மேலாளர் சுகந்தி, வருவாய் உதவியாளர் சீனிவாசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின், சமூக பணியாளர் வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்