சூலமங்கலம் முத்து முனீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
சூலமங்கலம் முத்து முனீஸ்வரர் கோவில் குடமுழுக்கு;
அய்யம்பேட்டை
அய்யம்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட சூலமங்கலம் 2-ம் சேத்தி கிராமத்தில் வலம்புரி விநாயகர், காட்டேரியம்மன், மதுரை வீரன், நாகர் உடனாகிய முத்து முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் நிறைவு பெற்று சிற்பங்களுக்கு வர்ணம் பூசப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து ஆறு கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து நேற்று காலை கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து புனித நீர் ஊற்றி விமான குடமுழுக்கும், மூலவர் குடமுழுக்கும் நடைபெற்றது. மாலை சாமிக்கு மகா அபிஷேகமும், இரவு சாமி வீதி உலாவும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.