செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
தக்கோலத்தில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
அரக்கோணம்
தக்கோலத்தில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் அருகே தக்கோலம் காந்திநகர் பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க திட்டமிட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி நேற்று காலை தனியார் நிறுவன ஊழியர்கள் டவர் அமைக்கும் பணியை தொடங்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் திடீரென தக்கோலம் - பேரம்பாக்கம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் சண்முகசுந்தரம், உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், தக்கோலம் பேரூராட்சி மன்ற தலைவர் நாகராஜன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.