பழுதடைந்த சாலையை சீரமைத்த பொதுமக்கள்
மழவன் சேரம்பாடியில் பழுதடைந்த சாலையை பொதுமக்களே சீரமைத்து வருகின்றனர்;
பந்தலூர்
பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடி பயணிகள் நிழற்குடை அருகில் இருந்து பொதுமக்கள் குடியிருப்பு வழியாக புஞ்சகொல்லி, கொளப்பள்ளி டேன்டீ உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் ஆட்டோக்கள், பிற வாகனங்கள், ஆம்புலன்சுகள் சென்று வருகின்றனர். தேயிலை மூட்டைகள் லாரியில் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து செல்கின்றனர். இதற்கிடையே மழவன் சேரம்பாடிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் பொதுமக்களே சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.