சி.ஐ.டி.யூ. கொடியேற்று விழா

கழுகுமலையில் சி.ஐ.டி.யூ. கொடியேற்று விழா நடந்தது.;

Update:2023-05-03 00:15 IST

கழுகுமலை:

கழுகுமலை மேலபஜாரில் மே தினத்தை முன்னிட்டு சி.ஐ.டி.யூ. ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். கழுகுமலை கிளை செயலாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். அங்குள்ள கொடிக்கம்பத்தில் கயத்தாறு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சீனிப்பாண்டியன் கொடியேற்றி வைத்து பேசினார். இதில் கயத்தாறு ஒன்றிய செயலாளர் சாலமன்ராஜ், துணை தலைவர்கள் மாரிமுத்து, அல்லித்துரை மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்