மகளிர் உரிமைத்தொகை திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூர் அருகே மகளிர் உரிமைத்தொகை திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.;

Update:2023-09-01 23:36 IST

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகிற 15-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற ஏராளமான பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் அருகே உள்ள திம்மனாமுத்தூர் பகுதியில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்த பயனாளிகளின் விவரம் சரியாக தொலைப்பேசி செயலியில் பதிவிடப்பட்டுள்ளதா, தகுதியான பயனாளிகளா என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு செய்தார்.

அப்போது அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்