கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

பனவடலிசத்திரம் அருகே கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.;

Update:2023-08-15 00:15 IST

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே மேலநீலிதநல்லூரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கடந்த ஜூலை மாதத்துக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் அக்கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தங்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கக்கோரி நேற்று கல்லூரி முன்பு வாயில் முழக்க போராட்டம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்