மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

வடக்கன்குளத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.;

Update:2023-08-22 00:48 IST

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவருடைய மகன் அனிஸ் (வயது 18). இவர் மும்பை கல்லூரியில் படித்து வந்தார். இவர் நேற்று இரவு வடக்கன்குளம் வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

வடக்கன்குளம் பஸ்நிலையம் அருகே உள்ள வேகத்தடையை தாண்டும் போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறியது. இதனால் அருகில் உள்ள மரத்தடியில் உள்ள சுவரில் மோதினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அனீஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் பணகுடி போலீசார் அனீஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்