ஆன்லைன் விளையாட்டால் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்

அரக்கோணத்தில் ஆன்லைன் விளையாட்டால் கல்லூரி மாணவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது.;

Update:2023-10-03 23:48 IST

அரக்கோணத்தை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர் ஒருவர் வீட்டில் திடீரென மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று காணப்பட்டதால் வீட்டில் உள்ளவர்கள் மாணவரை சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த மாணவர் கூச்சலிட்டப்படி ஆன் லைன் விளையாட்டு விளையாடுவது போன்று கை செய்கைகள் செய்தபடி இருந்தாக கூறப்படுகிறது. இதனால் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆன்லைன் விளையாட்டால் மனநிலை பாதிக்கப்பட்டதா என மஅரக்கோணம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்