புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-08-06 19:00 GMT

ஆற்றங்கரையில் தேங்கிய குப்பைகள் 

தென்காசி அருகே மேலகரம் சிற்றாற்றின் கரையில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் ஆறு முழுவதும் குப்பைக்கூளங்களாக காட்சி அளிக்கிறது. மேலும் ஆற்றிலும் அமலைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் ஆற்றில் தண்ணீர் செல்ல இடையூறு ஏற்படுவதுடன் மாசடைகிறது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-ஜெயக்குமார், மேலகரம்.

பஸ் வசதி வேண்டும்

திருவேங்கடம் தாலுகாவாக அந்தஸ்து உயர்த்தப்பட்ட பின்னரும் அங்கு போதிய பஸ் வசதி செய்து தரப்படவில்லை. எனவே திருவேங்கடத்தில் இருந்து சென்னை, கோவை உள்ளிட்ட வெளியூர்களுக்கு நேரடியாக அரசு பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-ஆனந்தராஜ், குளக்கட்டாகுறிச்சி.

ஒளிராத தெருவிளக்கு

ஆழ்வார்குறிச்சி 15-வது வார்டு வள்ளுவர் நகரில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்குள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-கண்மா உடையான், ஆழ்வார்குறிச்சி.

புதிய ரேஷன் கடை திறக்கப்படுமா? 

செங்கோட்ைட பம்பு ஹவுஸ் ரோட்டில் புதிய ரேஷன் கடை அமைப்பதற்காக பல்நோக்கு கட்டிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க நீண்ட தூரத்துக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே காட்சிப்பொருளான புதிய கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டுகிறேன்.

-யூசுப், செங்கோட்டை.

சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டி- ராஜபாளையம் மெயின் ரோட்டில் விவசாய பண்ணையில் இருந்து பிள்ளையார்குளம் வரையிலும் சாலையின் இருபுறமும் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. மேலும் விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-பாலமுருகன், மேலமரத்தோணி.


Tags:    

மேலும் செய்திகள்