விபத்து அபாயம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவிலில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் ஆங்காங்கே பள்ளம் விழுந்து காணப்படுகிறது. இந்த பள்ளங்களினால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும்முன் சாலையில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய வேண்டும்.
பொதுமக்கள், ராமேசுவரம்.
மின்விளக்கு வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பஸ் நிலையத்தில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் கூடுதல் மின்விளக்குகளை பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஏர்வாடி.
அடிப்படை வசதி தேவை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் உலையூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பள்ளிக்கு அடிப்படை வசதிகளை செய்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைத்தியநாதன், முதுகுளத்தூர்.
கொசுத்தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. கொசுக்களினால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை அப்புறப்படுத்த வேண்டும்.
காதர்மீரா, ஆர்.எஸ்.மங்கலம்.
சேதமடைந்த சாலை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் குதக்கோட்டை பஞ்சாயத்து கொட்டியக்காரன்வலசை அருந்ததியர் காலனியில் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலை போடப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. இதனால் இந்த சாலையில் செல்ல வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருப்புல்லாணி.