தேனியில் மறியல் செய்தபோது தாக்கியதாக போலீசார் மீது மக்கள் புகார்

தேனியில் மறியல் செய்தபோது தாக்கியதாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.

Update: 2022-09-23 17:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று வனவேங்கைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் குறவர் இன மக்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் செய்தனர். மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிலர் காயம் அடைந்தனர்.

இந்தநிலையில், மறியல் போராட்டம் நடத்திய மக்கள் சிலர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு இன்று வந்தனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் அவர்கள் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடிய எங்களை போலீசார் தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்டனர். இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்